பதிவு செய்த நாள்
15
மார்
2019
12:03
திருப்பூர்:நல்லூர் காசிபாளையம் ஸ்ரீசக்தி விநாயகர் கோவில், மகா கும்பாபிஷேக விழா, வரும், 17ல் நடக்கிறது.காசிபாளையம், ஸ்ரீசக்தி விநாயகர் கோவில் புதிதாக கட்டப்பட்டு, கும்பாபிஷேக விழா விரைவில் நடக்க உள்ளது. இன்று (மார்ச்., 15ல்), கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் துவங்க உள்ளன. மங்கள இசை, விநாயகர் வழிபாட்டுடன், பல்வேறு வழிபாடுகளும், முதல்கால யாகசாலை பூஜைகள் நடக்கின்றன.வரும், 16ம் தேதி இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும், புதிய விக்ரஹம், கோபுர கலச அபிஷேகம், 3ம் கால யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட பூஜைகள் நடக்கின்றன. வரும், 17ம் தேதி, நான்காம் கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து, காலை, 7:45 மணிக்கு, கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, மகா அபிஷேகம் மற்றும் அலங்காரபூஜையை தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்படுகிறது.