பதிவு செய்த நாள்
15
மார்
2019
12:03
திருப்பூர்:திருப்பூர், தாராபுரம் ரோடு, கே.செட்டிபாளையத்தில் உள்ள, விவேகானந்த வித்யா லயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், ஸ்ரீவித்ய கணபதி கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக பூஜைகள், 11ம் தேதி துவங்கியது; தினமும் யாகசாலை பூஜைகள் சிறப்புடன் நடந்தன.
கடந்த, 11ம் தேதி விக்னேஷ்வர பூஜை, புண்யாக வாசனம், பஞ்சகவ்யம், அங்குரார்ப்பணம், ரட்சாபந்தனம், கும்ப அலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன.நான்காம் கால யாகசாலை பூஜையை தொடர்ந்து, 13ம் தேதி காலை, 9:45 மணிக்கு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை, 10:15 மணிக்கு, மூலவர் கும்பாபிஷேகம், அபிஷேகம் மற்றும் அலங்காரபூஜைகள் நடந்தன.
பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமி, தஞ்சாவூர் ராமகிருஷ்ண விவேகானந்தா சேவாஸ்வர கிருஷ்ணானந்த மஹராஜ், நாமக்கல் ராமகிருஷ்ணர் ஆசிரமம் பூர்ணசேவானந்த மஹராஜ் முன்னிலை வகித்தனர். கும்பாபிஷேக விழாவில், பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.