நடுவீரப்பட்டு கோவில் சாலை பஞ்சர் பக்தர்கள் கடும் அவதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மார் 2019 12:03
நடுவீரப்பட்டு:விலங்கல்பட்டு வள்ளி தேவசேனா சிவசுப்பரமணியர் கோவிலுக்கு செல்லும் மலைபாதையின் சாலை, மோசமான நிலையில் உள்ளதால், பக்தர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
நடுவீரப்பட்டு அடுத்த விலங்கல்பட்டு கிராமத்தில் மிகவும் புகழ்பெற்ற உத்திரதணிகை மலையில் வள்ளி தேவசேனா சிவசுப்பரமணியர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கிருத்திகை தோறும், கடலூர்,பண்ருட்டி,குறிஞ்சிப்பாடி மற்றும் சுற்று பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.மலை மீது உள்ள கோவில் என்பதால் பக்தர்கள் நடந்து செல்ல சிரமப்பட்டனர்.
அதனடிப்படையில் கடந்த சில ஆண்டுக்கு முன்பு மலைபாதைக்கு தார்ரோடு போடப்பட்டது. இந்த ரோடு தற்போது வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு ஜல்லிகள் பெயர்ந்த நிலையில் உள்ளது. இந்த சாலையை தரமாக அமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்தும் எவ்வித பலனும் இல்லை. இதனால் கோவிலுக்கு வரும் வயதான பக்தர்கள் சிரமம் அடைகின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து கோவிலுக்கு செல்லும் மலைபாதைக்கு தரமான சாலை அமைத்து தர வேண்டும்.