திருப்புவனம்:திருப்பாச்சேத்தி அருகே பிரசித்தி பெற்ற மாரநாடு கருப்பண்ணசாமி கோயில் மாசி களரி திருவிழா வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது.
திருப்பாச்சேத்தி, மாரநாடு உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களின் காவல் தெய்வமான மாரநாடு கருப்பண்ணசாமி கோயிலில் வருடம் தோறும் மாசி களரி திருவிழா சிறப்பாக நடைபெறும். விடிய விடிய நடைபெறும் இத்திருவிழாவிற்கு மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். இந்தாண்டு திருவிழா வரும் 22ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. மதுரை, சிவகங்கை, மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.