திருப்புவனம் ஒரே இடத்தில் கிடைத்த பண்டைய கால கற்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மார் 2019 12:03
திருப்புவனம்: திருப்புவனம் அருகே பூவந்தி தனியார் மகளிர் கல்லூரியில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் குறித்த புகைப்பட கண்காட்சி கடந்த 10 நாட்களாக நடைபெற்றது.
தினசரி பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் வந்து கண்காட்சியை பார்வை யிட்டனர். இந்நிலையில் தொல்லியல்துறை அதிகாரிகளை மாணவர்கள் சிலர் சந்தித்து பண்டைய கால கற்களை காண்பித்துள்ளனர்.தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகையில், பண்டைய கால கற்கள் ஒருசில கற்கள் மட்டுமே கிடைக்க வாய்ப்பு உள்ளது. மானாமதுரை அருகே உருளி கிராமத்தில் தொடர்ச்சியாக 15 கற்கள் கிடைத்துள்ளன.
இதுபோன்று தொடர்ச்சியாக கற்கள் கிடைப்பது அரிது. இதுகுறித்து அகழாய்வு மேற்கொள்ள உள்ளோம், அதன்பின் கற்கள் அதன் காலங்கள் குறித்து ஆராய ஆய்விற்கு அனுப்பப்படும், என்றனர்.