பதிவு செய்த நாள்
15
மார்
2019
01:03
ராமநாதபுரம்:ராமேஸ்வரத்தில் இருந்து கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழாவிற்கு செல்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர். அவை வருமாறு: கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழாவிற்கு இன்று(மார்ச் 15) காலை படகில் புறப்பட்டு செல்கின்றனர். இதில் விசைப்படகில் 2,215 பேரும், நாட்டுப்படகில் 220 பேரும் செல்கின்றனர்.
செய்யக்கூடியதுகச்சத்தீவு செல்பவர்கள் தங்களுக்கு தேவையான உடைகள், போர்வைகள், குடிநீர் கொண்டு செல்லலாம். சமைத்த உணவுகள் கொண்டு செல்லலாம். ஒரு படகில் 30 பயணிகள் மட்டுமே செல்ல வேண்டும். 5 முதல் 70 வயது வரை உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி.
புகைப்படம் முத்திரையிடப்பட்ட அடையாள அட்டை வழங்கப்படும். அதனை பயணம் முடியும் வரை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ஒவ்வொருவரும் 5000 ரூபாய் வரை மட்டுமே கொண்டு செல்ல வேண்டும். கச்சத்தீவில் குடிநீர், சிற்றுண்டி வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
செய்யக்கூடாததுதங்களுடன் குழந்தைகளை அழைத்து செல்லக்கூடாது. பிளாஸ்டிக் பொருட்கள் போதை வஸ்துகள் கொண்டு செல்லக் கூடாது. கச்சத்தீவு பகுதியில் சமைக்க அனுமதியில்லை. சமைப்பதற்கான பொருட்களை எடுத்தச்செல்ல அனுமதியில்லை. தீப்பெட்டி, மண்ணெண்ணெய், டீசல், பெட்ரோல் கொண்டு செல்லக்கூடாது. சமைத்த பொருட்களை பாலிதீன் பைகளில் கொண்டு செல்லக்கூடாது. பழங்கள் மற்றும் விதைகளை கொண்டு செல்ல அனுமதியில்லை.
கச்சத்தீவு பகுதியில் போட்டோ, வீடியோ எடுக்க கூடாது. அதிகளவு பணமோ, விலை உயர்ந்த நகைகளை எடுத்து செல்லக்கூடாது. தாங்கள் கொண்டு வரும் பொருட்களை கச்ச்சதீவு பகுதியில் விற்கவோ, வாங்கவோ அனுமதியில்லை, என போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.