காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவிலில், 63 நாயன்மார்கள் உற்சவம், நேற்று, விமரிசையாக நடைபெற்றது.காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருவிழா, 11ல், கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொன்மையான பழைய சோமாஸ்கந்தர் உற்சவர் சிலை சீரமைப்பு பணி, முழுமையாக முடிந்தது.இதையடுத்து, வியாழக்கிழமை இரவு, வெள்ளி ரிஷப வாகனத்தில் ஏகாம்பரநாதர் எழுந்தருளி, வீதியுலா நடைபெற்றது.நேற்று காலை, ஆறாவது நாள் திருவிழாவில், 63 நாயன்மார்கள் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி முன்னால் செல்ல, 63 நாயன்மார்களும் பின் தொடர்ந்து, ராஜவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.இன்று காலை, 7:00 மணிக்கு, பிரபல உற்சவமான தேர் திருவிழா நடைபெறுகிறது. பல வகையான வாத்தியங்கள் முழங்க, பக்தர்கள் வடம் பிடித்து, தேரை இழுத்து செல்வர்.செங்கல்பட்டில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், 63 நாயன்மார் உற்சவம், நேற்று நடைபெற்றது. இன்று, மரத்தேர் வீதியுலா நடைபெறுகிறது.