பதிவு செய்த நாள்
17
மார்
2019
11:03
சென்னை:மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், இன்று, தேர் திருவிழா நடக்கிறது.மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், மார்ச் 11ல், பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேர் திருவிழா, இன்று நடக்கிறது.இன்று காலை, 6:00 மணிக்கு, கபாலீஸ்வரர் தேரில் எழுந்தருளுகிறார். 7:00 மணிக்கு, தேர் வடம் பிடிக்கப்படுகிறது. பின், ஐந்திரு மேனிகள் விழா நடக்கிறது.நாளை காலை, திருஞான சம்பந்தர், எலும்பை பூம்பாவையாக்கி அருளுதல் நிகழ்ச்சி நடக்கிறது. அதைத் தொடர்ந்து மாலையில், வெள்ளி விமானத்தில் இறைவன், அறுபத்து மூன்று நாயன்மார்களுடன், திருக்காட்சி அருளும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவில், சந்திரசேகரர் பார்வேட்டை நடக்கிறது.அதே போல, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் பங்குனிப் பெருவிழாவில், இன்று காலை, 5:30 மணிக்கு, தேர் திருவிழா நடக்கிறது. இரவு, 9:00 மணிக்கு, சந்திரசேகர் புஷ்ப விமானம், தியாகராஜர் வீதி உலா நடக்கிறது.