திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா மார்ச் 15 கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் ஒரு வாகனத்தில் சுவாமி அருள்பாலிக்கிறார். திருவிழாவின் 5ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று சுவாமி கைபாரம் நிகழ்ச்சி நடந்தது. அதைமுன்னிட்டு 2 டன் எடையுள்ள வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி, தெய்வானை எழுந்தருளினார். பக்தர்கள் சீர் பாதங்கள் பொதுமக்கள் வாகனத்தை உள்ளங்கையில் தலைக்கு மேல் துாக்கி கோயில் வாசல் வரை ஓடினர். சந்தனம் பிரசாதம் வழங்கப்பட்டது.