பதிவு செய்த நாள்
17
மார்
2019
11:03
ப.வேலூர்: ஜேடர்பாளையம் அடுத்த, பாகம்பாளையத்தில் உள்ள, பட்டத்தரசியம்மன் கோவிலில், திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த, 5ல் பூச்சாட்டுதல் நடந்தது. நேற்று, பக்தர்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீராடி, தீர்த்த குடங்களுக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, பக்தர்கள், தீர்த்தக் குடங்களுடன் கோவிலை வந்தடைந்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலை, 5:00 மணிக்குமேல், அம்மன் முன் பொங்கல் படையல் வைத்து அபிஷேகம் செய்தனர். இரவு, மாவிளக்கு கொண்டு பூஜை செய்தனர். இன்று காலை கிடா வெட்டுதல், மாலையில் மஞ்சள் நீராடல், அம்மன் திருவீதி உலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.