உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயிலில் மாசிமக திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மார் 2012 11:03
உத்தமபாளையம் : உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில் மாசிமக திருவிழாவில்,தினமும் நடக்கும் பல்வேறு சமுதாயத்தினரின் மண்டகப்படியில்,சுவாமி-அம்மன் நகர்வலம் விமரிசையாக நடந்து வருகிறது. உத்தமபாளையத்தில் தென்காளகஸ்த்தி எனப்படும், காளாத்தீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலின் மாசிமக திருவிழா கடந்த மாதம் 26 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி-அம்மன் வீதி உலா நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. ஊர்வலத்தின் போது ஊரில் உள்ள அனைத்து சமுதாயத்தினரின் மண்டகப்படியில் சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் நடக்கிறது. ஊர்வலத்தில் நகரின் முக்கிய இடங்களில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி-அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பக்தர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு வருகின்றனர். மார்ச் 6ல் திருக்கல்யாணம், பூப்பல்லக்கு ஊர்வலம் நடக்க உள்ளது. 7 ம்தேதி தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை சார்பில் நிர்வாக அதிகாரி ராஜா மற்றும் அனைத்து சமுதாய ஒருங்கிணைப்பு சங்கத்தினர் செய்து வருகிறனர்.