பதிவு செய்த நாள்
18
மார்
2019
04:03
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த சின்னகுப்பம் கிராமத்தில் பாலமுருகன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் (மார்ச்., 16ல்) காலை 7.00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்துசாந்தி, அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், கடஸ்தாபனம், லட்சார்ச்சனை, மஹா தீபாராதனை நடந்தது.
காலை 7.00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை ஆரம்பம், மூலவர் மற்றும் விமானத்திற்கு காப்பு கட்டுதல், மஹாபூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது.
அதனையடுத்து தம்பதி பூஜை, வடுக பூஜை, கன்யா பூஜை, கோபூஜை, புனித நீர்குடங்கள் 9.00 மணிக்கு புறப்படாகி, 10:05 மணிக்கு விமான கலசத்தில் புனித கங்கை நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து மூலவர் பாலமுருகனுக்கு மகா அபிஷேகம் நடந்தது.
ஏற்பாடுகளை சின்னகுப்பம் கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கான பாதுகாப்பு பணிகளை சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி., ஜவகர்லால் தலைமையில் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ், சப் இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், மாணிக்கம், டி.எஸ்.பி., தனிப்படை பிரிவு சப் இன்ஸ்பெக்டர்கள் மாயச்சந்திரன், வேலாயுதம் ஆகியோர் செய்திருந்தனர்.