Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மணக்குள விநாயகர் கோவிலில் சங்காபிசேக விழா மணக்குள விநாயகர் கோவிலில் ... பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் விழா கோலாகலம் பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரம்மதேசம் கைலாசநாதர் கோயிலில் தெப்பத்திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மார்
2019
17:54

திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் வட்டம், பிரம்மதேசம், பிருஹந்நாயகி உடனாய கைலாசநாதர் கோயிலில் வருகிற 22.03.2019 வெள்ளிக்கிழமை தெப்பத் திருவிழா நடைபெற இருக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை தக்கார்/ செயல் அலுவலர் சத்தியசீலன்,  ஆய்வர் சீதாலெட்சுமி ஆகியோர் செய்துள்ளனர். கோயில் ஸ்தல அர்ச்சகர் ராஜ்குமார் சிவம் கோயில் பணியாளர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோரும் திருவிழா செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். 

நிகழ்ச்சி நிரல்

22.03.2019
காலை 8.00 மணி - மங்கள இசை, திருமுறை இசை, அனுக்ஞை, விக்னேச்வர பூஜை, புண்யாஹ வாசனம், பஞ்ச கவ்ய பூஜை, ஸ்நபனாங்க பூஜை, ஹோமம் கோபூஜை, கஜபூஜை, அஸ்வபூஜை (குதிரை)

பகல் 11.00 மணி அளவில் - கணபதி, சுப்ரமண்யர், சுவாமி, அம்பாள், சோமாஸ்கந்தர் (பஞ்சமூர்த்திகளுடன்) சண்டேசர் ஆகிய மூர்த்திகளுக்கு அபிஷேகம், ஸ்நபனாபிஷேகம், தீபாராதனை மாலை 5.00 மணி - பூந்தட்டு ஊர்வலம்

மாலை 6.00 மணி - நாதஸ்வர இசை, பரதநாட்டிய இசை, (நேரங்கருதி மாலையில் அமைக்கப்பட்டுள்ளது) இந்நிகழ்வு உற்சவ மூர்த்திகள் திருமுன்னர் நிகழ்த்தப்பெறும்

இரவு 7.35 க்கு மேல் 8.35க்குள் துலா லக்கனத்தில் தொடர்ந்து 11 முறை தடாகத்தில் வலம் வருதல், வலம் வரும்போது எட்டுச் சந்திகளிலும் உபசாரஞ் செய்தல்  - கணபதி, சுவாமி, அம்பாள், சுப்ரமணியர், சண்டேசர் ஆகிய பஞ்சமூர்த்திகள் தெப்பக் காட்சிதர தடாகத்திற்கு எழுந்தருளல்சுவாமிக்கு முன்னர் பஞ்சாக்ஷரம், ஷடாக்ஷரம், பாசுபதாஸ்திரம், மிருத்யுஞ்ஜயம், வ்யோமவியாபிபத மந்திரம் ஆகிய மஹா மந்திரங்களை ஜபம் செய்தல்.

சுவாமிக்குப் பின்னால் வேத பாராயணம், திருமுறைப் பாராயணம், தெப்பத்தின் தென்பகுதியில் வீணாகானஞ் செய்தல், மேற்பகுதியில் சங்க முழக்கம், அருகில் நாதஸ்வர இசையையும் நிகழ்த்துதல்.

உள்ளே நீராழி மண்டபத்தில் பரத நாட்டியஞ் செய்தல் வாய்ப்பாட்டுடன் குளத்திற்கு வெளியே சிவகண வாத்யங்கள் வாசித்தல், இன்னும் பல்வகை நிகழ்வுகளால் அழகுறச் செய்தல், தெப்பத்தில் சுவாமி வலம் வந்தவுடன் நீராழி மண்டபத்தில் உபசாரங்களைச் செய்தல்.

இரவு சுமார் 10.00 மணி அளவில்  - கிராமபிரதக்ஷிணம் (வீதி உலா) சுவாமி கோயில் சேர்ந்தவுடன் "சிரம சாந்திக்காக உத்தராங்க ஸ்நபனாபிஷேகம். (முன்னதாக உதகாபிஷேகம், சங்காபிஷேகம்) அலங்காரம், தீபாராதனை, உபசாரங்கள், பிரசாதம் வழங்குதல், நிறைவு.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
கூடலுார், கேரள வனத்துறையின் பலத்த கெடுபிடிகளுடன் தமிழக -கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் ... மேலும்
 
temple
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், தேர்த்திருவிழா நேற்று நடந்தது.பொள்ளாச்சி ... மேலும்
 
temple
சோழவந்தான் : சோழவந்தான் ஜெனகை நாராயணப்பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி நேற்று அதிகாலை 5:30 ... மேலும்
 
temple
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள, ஸ்ரீசித்ரகுப்தர் கோவிலில், 90ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி ... மேலும்
 
temple
 வாடிப்பட்டி, : வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.