பதிவு செய்த நாள்
19
மார்
2019
11:03
வடபழனி: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, வடபழனி ஆண்டவர் கோவிலில், நேற்று லட்சார்ச்சனை துவங்கியது.
சென்னை, வடபழனி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, ஆண்டுதோறும் லட்சார்ச்சனை, தெப்பத் திருவிழா விமரிசையாக நடத்தப்படும்.இந்த ஆண்டு, பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, நேற்று காலை, 9:00 மணிக்கு, லட்சார்ச்சனை துவங்கியது; 20ம் தேதி வரை, லட்சார்ச்சனை நடைபெறும்.இதையடுத்து, 21ம் தேதி இரவு, 7:00 மணிக்கு, சிறப்பு அலங்காரத்துடன், சுவாமி புறப்பாடு நடக்கிறது. 22ல், வடபழனி ஆண்டவர் புறப்பாடு; 23ல், வள்ளி - தெய்வானை உடன், சண்முகர் புறப்பாடு; 24ல், சுப்பிரமணியர் புறப்பாடு நடைபெறும்.இம்மூன்று நாட்களும், கோவில் குளத்தில் உள்ள, நீராழி மண்டபத்தில், சுவாமி எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.