விருதுநகர் மாரியம்மன் கோயிலில் விரதம் துவங்கிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2019 11:03
விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா துவக்கமாக நேற்று பக்தர்களுக்கு காப்பு கட்டும் விழா நடந்தது. பங்குனி பிறந்தாலே பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி விழா பொங்கல் களை கட்ட துவங்கி விடும். இதற்கு சான்றாக நேற்று முன்தினம் சாற்று நடந்தது. இதன் விழா தெப்பம் அருகே உள்ள விநாயகர் கோயிலில் நடந்தது. இதன்பின் நேற்று காலை அம்மனுக்கு விஷேச அலங்காரத்துடன் பூஜை நடக்க திரளான பக்தர்கள் காப்புகட்டி விரதத்தை 21 நாள் விரதத்தை துவங்கினர்.
இதை தொடர்ந்து மார்ச் 31 ல் கொடியேற்றம் நடக்கிறது. அந்நாள்முதல் உள்ளூர், வெளியூர் வணிகர்கள் மண்டகப்படி செலுத்துவார்கள். ஏப்.,7ல் நடக்கும் பங்குனி பொங்கல்போது 18 பட்டி கிராம மக்களும் பொங்கல் வைத்து மாரியம்மனை வழிபடுவர். ஏப்., 8ல் அக்னி சட்டியை எடுத்து வந்து வேண்டுதலை நிறைவேற்றுவர். ஏப்., 9ல் தேரோட்டம், ஏப்., 11 ல் கொடி இறக்கம் நடக்கிறது. பங்குனி பொங்கலை யொட்டி கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளி திடலில் மார்ச் 29 முதல் ஏப்., 21 வரை பொருட்காட்சி நடக்க உள்ளது.