ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் பிரகார மண்டம் மேற்கூரை புனரமைப்பு பணிகள் 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடக்கிறது. உத்தரகோசமங்கையில் மங்களநாத சுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது.
புராதன சிறப்பு பெற்ற கோயிலாகும். இங்கு மரகதநடராஜர் சன்னதியும் உள்ளது. இங்கு மங்களநாதசுவாமி கோயில் பிரகார மண்டபம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. கோயில் வடக்கு, மேற்கு பகுதிகளில் மேற்கூரை அமைக்கும் பணிகள் கல்துாண்களால் நடக்கிறது. 20 மீ., நீளத்திற்கு மேற்கூரை அமைய உள்ளது. இதற்காக தனியார் நிறுவனம் 1.50 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.மைலாடி பாறை: மங்களநாதசுவாமி கோயில் மேற்கூரை அமைக்கும் பணிகளுக்காக கற்பாறைகள் கன்னியாகுமரி மாவட்டம் மைலாடி பகுதியில் இருந்து் கொண்டு வரப்பட்டு பணிகள் நடக்கிறது. திருப்பூர் அருகே உதயகிரியை சேர்ந்த ஸ்தபதி வேல்முருகன் தலைமையில் பணிகளை செய்கின்றனர். 20 க்கும் மேற்பட்ட சிற்ப கலைஞர்கள் பணிபுரிகின்றனர்.வி.ராஜாமணி 47, சிற்பக்கலைஞர்: 16 வயதில் இருந்து சிற்ப கலைத்தொழிலாளியாக உள்ளேன். 2 ம் வகுப்பு வரை தான் படித்தேன். அனுபவமாக இந்த தொழிலை செய்து வருகிறேன். இன்று இயந்திரங்கள் மூலம் சிற்ப கலைப்பணிகள் எளிமையாக உள்ளது. இயந்திரங்கள் இல்லாமல் வரும் காலங்களில் சிற்பகலை பணிகள் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. நுணுக்கமான பணிகளை கூட இயந்திரங்கள் மூலம் எளிமையாக செய்யப்பட்டு வருகிறது, என்றார்.