வறண்டது அழகர்கோயில் மலை: தண்ணீர் இன்றி தவிக்கும் விலங்குகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2019 12:03
மேலூர்: கோடை துவங்கிய சில நாட்களிலே போதிய தண்ணீர் இல்லாமல் அழகர் கோயில் மலையில் தாவரங்கள் கருகி வருகின்றன. இதனால் இங்கு வாழும் வன உயிரினங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. தமிழகத்தில் வழக்கமாக பெய்ய வேண்டிய மழை அளவு கிட்டவில்லை. திருநெல்வேலி மாவட்டம் மட்டுமே போதிய மழை பெற்றது. மதுரை மாவட்டத்தில் பெரும் அளவு மழை குறைந்தே பதிவானது. இதனால் தண்ணீர் பிரச்சனை ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.மழை இல்லாததால் பச்சை பசேலென இருக்கும் அழகர்கோயில் மலை தற்போது வாடி காணப்படுகிறது. மலைகளில் உள்ள மரம், செடி கொடிகள் பட்டு போயின. இதனால் மறைந்து கிடந்த மலையின் தரைப்பகுதி பளிச்சென தெரிகிறது.
புள்ளி மான் பலி: இதற்கிடையில் இங்கு வாழும் காட்டு விலங்குகள் மான், பன்றி, காட்டெருமை, குரங்குகள் , பறவைகள் தண்ணீர் இல்லாமல் தத்தளிக்கிறது. தண்ணீர் கிடைக்காதா என பல உயிரினங்கள் மலையடிவாரத்தை ஒட்டிய கிராம பகுதிகளுக்கு வரத்துவங்கியுள்ளன. இவ்வாறு வந்த புள்ளிமான் ஒன்று மேலூர் செட்டியம்பட்டி கிராமத்தில் நாய் கடித்ததில் பலியானது. இன்னும் சில நாட்களில் ஏதேனும் மழை பெய்தால் மட்டுமே அழகர்கோயில் வன தாவரங்களும், உயிரினங்களும் தப்பும்.