சோழவந்தான் பேட்டை வீரமாகாளியம்மன் கோயில் திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மார் 2019 01:03
சோழவந்தான்:சோழவந்தான் பேட்டை வீரமாகாளியம்மன் கோயில் மாசி திருவிழா மார்ச் 12 பக்தர்கள் காப்புக்கட்டுதலுடன் துவங்கியது.
விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. மார்ச் 17 ல் பூத்தட்டு அம்மன் வீதி உலாவும், நேற்று முன் தினம் (மார்ச்., 18ல்) இரவு திருவிளக்கு பூஜையும் நடந்தன. நேற்று (மார்ச்., 19ல்) பால்குடம், அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்தனர்.