பதிவு செய்த நாள்
20
மார்
2019
02:03
அனுப்பர்பாளையம் : திருப்பூர், கொங்கணகிரி கந்தப்பெருமான் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, கால்கோள் விழா நடந்தது.திருப்பூர், காலேஜ் ரோட்டில், பிரசித்தி பெற்ற கொங்கணகிரி கந்தப்பெருமான் கோவில் உள்ளது.
திருப்பூர் மக்கள் நல அறக்கட்டளை சார்பில், சுற்று சுவர், ராஜ கோபுரம், கிரிவல பாதை, வாகன நிறுத்துமிடம், கழிப்பிடம், வர்ணம் பூசுதல், உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப் பட்டன.
இந்நிலையில், கும்பாபிஷேக விழா, ஏப்., 18ம் தேதி நடக்கிறது. யாகசாலை அமைப்பதற்கான கால்கோள் விழா நடந்தது. கந்தப்பெருமானுக்கு சிறப்பு பூஜையை தொடர்ந்து, திருப்பரங் குன்றம் ராஜா பட்டர் தலைமையில் நடந்த விழாவில், மக்கள் நல அறக்கட்டளை தலைவர் மெஜஸ்டிக் கந்தசாமி, செயலாளர் கணேஷ், பொருளாளர் துரைசாமி, துணை தலைவர் ராஜாமணி, டெக்பா தலைவர் ஸ்ரீகாந்த், ஆதீஸ்வரா டிரஸ்ட் தலைவர் சுப்ரமணியம் மற்றும் பக்தர்கள் பங்கேற்கின்றனர்.