உடுமலை : கணியூர் ஜோதிநகர் ஐயப்பன் கோவிலில், நாளை, (21ம் தேதி) உத்திர நட்சத்திர சிறப்பு பூஜை விழா நடக்கிறது. விழாவையொட்டி, கோவிலில், காலை 9:00 மணிக்கு, கணபதி ஹோமம், காலை 11:00 மணிக்கு, சிறப்பு அபிஷேக பூஜை, 12:30 மணிக்கு, சிறப்பு அலங்கார பூஜை நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.