புதுச்சத்திரம் திருச்சோபுரநாதர் கோவிலில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மார் 2019 02:03
புதுச்சத்திரம்:திருச்சோபுரம் சத்யாயதாஷி சமேத திருச்சோபுரநாதர் கோவிலில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.விழாவையொட்டி கடந்த 10 ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை நடந்தது. 11 ம் தேதி துவஜாரோகணம், கொடியேற்றம் நடந்தது. மாலை 7.00 மணிக்கு சுவாமி புறப்பாடு, 12 ம் தேதி முதல் 16 ம் தேதி வரை தினமும் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்தது.
சிறப்பு விழாவான தேரோட்டம் நேற்று (மார்ச்., 19ல்) நடந்தது. அதனையொட்டி காலை 9.00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலை 4.30 மணிக்கு தேர் வீதியுலா நடந்தது. இதில் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தேர்வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். புதுச்சத்திரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.