பதிவு செய்த நாள்
20
மார்
2019
02:03
ஈரோடு: பழநி பங்குனி உத்திர திருவிழாவில் முருகனை தரிசிக்க, காவடி சுமந்து, ஈரோடு வழியாக, பக்தர்கள் பாதயாத்திரையாக செல்கின்றனர்.
பழநி முருகன் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா, கோலகமாக கொண்டாடப்படுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், விரதமிருந்து முருகனை தரிசிக்கின்றனர்.
இந்நிலையில் ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த, நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், பழநி கோவிலுக்கு காவடி சுமந்து, நடைபயணம் செல்கின்றனர். பள்ளிபாளையம், மோளபாளை யத்தை சேர்ந்த பக்தர்கள், பால்காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி சுமந்து, ஈரோடு வழியாக, பாதயாத்திரை செல்வது அதிகரித்துள்ளது.