பதிவு செய்த நாள்
20
மார்
2019
02:03
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில் பங்குனி உத்திர தேர்திருவிழா, நேற்று (மார்ச்., 20ல்) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, மலை மீது, சேவல் கொடியேற்றப் பட்டது. முன்னதாக, முருகன், வள்ளி, தெய்வானை, உற்சவ மூர்த்திகள் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் இன்றிரவு (மார்ச்., 20ல்) நடக்கிறது. நாளை (மார்ச்., 21ல்) காலை, 6:00 மணிக்கு, தேரோட்டம் நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு, தேர் நிலை சேரும். 22 காலை, பரிவேட்டை நிகழ்ச்சியும், இரவு, தெப்பத்தேர் உற்சவமும் நடக்கிறது. 23 காலை, மஹா தரி சனமும், இரவு, மஞ்சள் நீர், நிகழ்ச்சியுடன், பங்குனி உத்திர விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை, செயல்அலுவலர் அருள்குமார் தலைமையில், பணியாளர்கள், அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.