சங்கராபுரம்,:சங்கராபுரத்தில் மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது.ராமாயி எழிலகத்தில் நடந்த பிரார்த்தனைக்கு வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துகருப்பன் தலைமை தாங்கினார். வள்ளலார் மன்ற தலைவர் பால்ராஜ், நெல் அரிசி ஆலை சங்க தலைவர் வேலு, வியாபாரிகள் சங்க தலைவர் பிரகாசம், செயலர் குசேலன் முன்னிலை வகித்தனர்.சைவ சித்தாந்த பேராசிரியர் ஜம்புலிங்கம் தலைமையில் அகவல் படித்து மழை வேண்டியும், உலக மக்கள் நலன் வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.