பதிவு செய்த நாள்
22
மார்
2019
03:03
திருவள்ளூர்: திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவில், பெரியகுப்பம், அருணாசலேஸ்வரர் கோவில், மணவாள நகர் மங்களேஸ்வரர் கோவில் உட்பட அனைத்து சிவன் கோவில்களில் தட்சிணா மூர்த்தி சன்னதியில் நேற்று (மார்ச்., 21ல்) மாலை, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.பால், தயிர், விபூதி மற்றும் வாசனை திரவியங்களால் தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம் நடைபெற்று, குரு வழிபாடு நடைபெற்றது. பூங்கா நகர், தட்சிணாமூர்த்தி பீடத்தில், 100 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது.