கம்மாபுரத்தில் பங்குனி மாத திருவிழாவையொட்டி, ராமாயண நாடகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மார் 2019 03:03
கம்மாபுரம்: பங்குனி மாத திருவிழாவையொட்டி, கம்மாபுரம் அடுத்த வி.சாத்தப்பாடி செல்லியம்மன் கோவிலில், சம்பூரண ராமாயண நாடகம் நடந்தது.இதனையொட்டி, கடந்த 19ம் தேதி, காலை 7:00 மணியளவில் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.
தினமும், காலை மாலை அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், இரவு 9:00 மணியளவில், ராமாயண நாடகம் நடந்தது. ராவண யுத்தம் முடிந்து மகுடாபிஷேகம் காட்சிகள் நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.