பதிவு செய்த நாள்
22
மார்
2019
04:03
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, 1008 குடம் பால் அபிஷேகம் மற்றும் 108 காவடி உற்சவம் நடந்தது.
சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவிலில், நேற்று 21ம் தேதி, வியாழக்கிழமை பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, 1008 குடம் பால் அபிஷேகம் மற்றும் 108 காவடி உற்சவம் நடந்தது.விழாவை முன்னிட்டு நேற்று(மார்ச்., 21ல்) காலை 6:00 மணிக்கு, விநாயகர், பாலதண்டாயுதபாணி, ராஜராஜேஸ்வரர், ராஜராஜேஸ் வரி மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. 9:00 மணிக்கு ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து 1008 பால்குடங்களும், கெடில நதிக்கரையிலிருந்து 108 காவடிகளும் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து, பாலதண்டாயுதபாணிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
மகா தீபாராதனை நடந்தது.விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் தலைமையிலான விழா குழுவினர் செய்திருந்தனர்.அதேபோல் சி.என்.பாளையம்
சொக்கநாதர்கோவில், நடுவீரப்பட்டு கைலாசநாதர் ஆகிய கோவில்களில் பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.