பதிவு செய்த நாள்
22
மார்
2019
04:03
வால்பாறை:வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், பங்குனி உத்திரத் திருவிழாவை யொட்டி பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், 67ம் ஆண்டு பங்குனி உத்திரத் திருவிழா கடந்த, 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் (மார்ச்., 20ல் மாலை சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.
நேற்று (மார்ச்., 21ல் காலை, 10:00 மணிக்கு நல்லகாத்து விளையாட்டு மைதானத்திலிருந்து, பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். காலை, 11:00 மணிக்கு அன்னதான விழா துவங்கியது.
மாலையில், அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவையொட்டி நேற்று (மார்ச்., 21ல் பெரும்பாலான
எஸ்டேட் தொழிலாளர்களுக்கு விடுமுறை விடப்பட்டது.
கொளுத்தும் வெயிலில் கோவிலுக்கு சென்ற பக்தர்களுக்கு, வால்பாறை ஸ்டேட் வங்கி சார்பில் நீர்மோர் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை முருகன் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.
*கிணத்துக்கடவு பொன்மலை முருகன் கோவில் மற்றும் முத்துக்கவுண்டனூர் முத்துமலை முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா, கடந்த, 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று (மார்ச்., 21ல், பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, பொன்மலை முருகன் கோவிலில், பரம்பரை அறங்காவலர் சண்முகசுந்தரி குடும்பத்தார் பால்குடம் எடுத்து, முருகனை வணங்கினர்.