பதிவு செய்த நாள்
22
மார்
2019
04:03
பொள்ளாச்சி:பொள்ளாச்சி தாளக்கரை நல்லிக்கவுண்டன்பாளையம் தண்டாயுதபாணி சுவாமி கோவிலில், வரும் 24ம் தேதி திருக்குட நன்னீராட்டு விழா நடக்கிறது.பொள்ளாச்சி தாளக்கரை
நல்லிக்கவுண்டன்பாளையம் பொன்முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில், பொதுமக்கள் இணைந்து தண்டாயுதபாணி சுவாமி கோவில் கட்டியுள்ளனர். கோவில் கும்பாபிஷேக பூஜைகள் இன்று (மார்ச்., 22ல்)துவங்குகிறது.
இன்று (மார்ச்., 22ல்) மாலை திருவிளக்கு பூஜை, புனிதநீர் கலச வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு, ஐம்பூத வழிபாடு, திருமகள் வழிபாடு, நிலத்தேவர் வழிபாடு நடக்கிறது.இரவு, முளைப் பாலிகையிடுதல், காப்பணிவித்தல், திருக்குடங்களில் இறைசக்திகளை எழுந்தருளச்
செயல், முதற்கால வேள்வி, திரவியாகுதி, நவகோள் வேள்வி, மலர் வழிபாடு, திருமுறை விண்ணப்பம், பெரும் போரொளி வழிபாடு செய்யப்படுகிறது. நாளை (மார்ச்., 23ல்) காலை இரண்டாம் கால வேள்வி, மாலை விமான கலசம் நிறுவுதல், இரவு மூன்றாம் கால வேள்வி நடக்கிறது.நாளை மறுநாள் (24ம் தேதி) காலை நான்காம் கால வேள்வி வழிபாடுகளை தொடர்ந்து, காலை, 6:30 மணிக்கு திருக்குட நன்னீராட்டு விழா நடக்கிறது.
மாலையில், முருகனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார வழிபாடு நடந்தது.முத்துமலையில் நடந்த விழாவில், சுவாமி அலங்கரிக்கப்பட்டு, தேரில் திருவீதி உலா வந்தார். பக்தர்கள்
முருகனை வழிபட்டு அருள் பிரசாதம் பெற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.