கரிகால சோழீஸ்வரர் கோவில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மார் 2012 10:03
சிவகங்கை:நாட்டரசன்கோட்டை கரிகால சோழீஸ்வரர் கோவிலில் மாசி மக திருவிழாவை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடந்தது. கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் மாசி மக திருவிழா துவங்கியது.தினமும் பல்வேறு அலங்காரங்களில் சுவாமி புறப்பாடு நடக்கும். மூன்றாம் நாள் திருவிழாவை முன்னிட்டு சுவாமி பஞ்சமூர்த்திகள் அலங்காரத்தில் காட்சி அளித்தார். அன்று இரவு 9 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடந்தது. நாளை மீண்டும் பஞ்ச மூர்த்தி சுவாமிகள் புறப்பாடு நடக்கும். ஒன்பதாம் நாளான மார்ச் 7ம் தேதி காலை 10.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். மார்ச் 8 அன்று காலை 11 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம், அதை தொடர்ந்து இரவு 7 மணிக்கு சுவாமி புறப்பாடும், கொடி இறக்கத்துடன் மாசி மக திருவிழா நிறைவு பெறும்.