பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் பிரமோற்சவத்தையொட்டி நேற்று முன்தினம் மாலை தெப்பத்தேர் விழா நடந்தது.பெரியநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் பிரமோற்சவ விழா கடந்த, 16ம் தேதி முதல் நடந்து வருகிறது. ஒன்பதாம் நாளான நேற்று முன்தினம் மாலை பெருமாள் சேஷ வாகனத்தில் எழுந்தருளி, வைகுண்ட நாதர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.