விழுப்புரம்: விழுப்புரத்தில் உள்ள சங்கர மடத்தில், சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 125வது ஜெயந்தி விழா நேற்று நடந்தது.
ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மகா பெரியவர் விக்ரகத்துக்கு விசேஷ அபிஷேகம் நடந்தது. ஆயுஷ், ஆவகந்தி, ருத்ர ேஹாமங்களும், ருத்ர பாராயணமும் நடந்தது. சங்கர மடத்தில் இயங்கும் வேத பாடசாலையில் படித்த முன்னாள் மாணவர்கள், விழுப்புரம் வித்தியார்த்திகள் டிரஸ்ட் அமைப்பின் மூலமாக, சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் விக்ரகத்துக்கு பாதுகை, கிரீடம் உள்ளிட்ட முழு வெள்ளிக்கவசத்தை செய்து தந்துள்ளனர். அபிஷேகத்தைத் தொடர்ந்து, சுவாமிகளின் விக்ரகத்துக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மதியம், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.