சிங்கம்புணரியில் பிடாரியம்மன் கோயில் பங்குனித்திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2019 02:03
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பிரான்மலை குன்றுவளர்ந்த பிடாரியம்மன் கோயிலில் பங்குனித்திருவிழா நடந்தது. மார்ச் 25ம் தேதி காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை பிரான்மலை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்தனர். அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மாலை 6:00 மணிக்கு பெண்கள் பூத்தட்டு எடுத்து வந்து அம்மனுக்கு பூச்சொரிதல் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார்.