பதிவு செய்த நாள்
28
மார்
2019
12:03
இளையான்குடி: தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோயில் பங்குனித்திருவிழா நாளை (மார்ச்., 29ல்) கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
தென் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும், பங்குனித் திருவிழா நடைபெறுவது வழக்கம்.மதுரை, தேனி, திண்டுக்கல், விருது நகர், ராமநாதபுரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஸ்ரீ பக்தர்கள் வந்து செல்வார் கள்.
பக்தர்கள், அம்மனுக்கு பொங்கல் வைத்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும், அக்னிசட்டி எடுத்தல், கரும்பு தொட்டிலில் குழந்தையை சுமந்து வருதல், மாவிளக்கு, கண்மலர் காணிக்கையாக்குதல், ஆயிரம் கண் பானை, அலகு குத்துதல், போன்ற நேர்த்தி கடன்களை செலுத்துவர்.
10 நாட்கள் நடைபெறும் தாயமங்கலம் பங்குனித்திருவிழா, நாளை(மார்ச்., 29ல்) காலை சிறப்பு ஹோமம், பூஜைகளுடன் நடந்த பின்னர், இரவு 10:35 மணிக்கு கோவில் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கும்.
விழாவின் போது, அம்மன் தினமும் சிம்மம், குதிரை, காமதேனு, அன்னபூத, வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.விழாவின், முக்கிய நிகழ்ச்சியான, பொங்கல் விழா ஏப்ரல் 5 ஆம் தேதியும், 6ஆம் தேதி தேரோட்டமும், பால்குடம் 7ஆம் தேதியும்
நடைபெறும். அதனை தொடர்ந்து, 8 ஆம் தேதி தீர்த்தவாரி உற்ஸவத்துடன் திருவிழா நிறைவுபெறும்.
பக்தர்களின் வசதிக்காக, வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை தாயமங்கலத் திற்கு அனைத்து பகுதிகளில் இருந்தும், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.