Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! செம்பை பார்த்தசாரதி கோவிலில் 98வது ஏகாதசி இசைத் திருவிழா! செம்பை பார்த்தசாரதி கோவிலில் 98வது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவிடைமருதூர் ரிஷிபுரிஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

04 மார்
2012
01:03

கும்பகோணம்: தஞ்சை ரிஷிபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் இன்று(4ம் தேதி) கோலாகலமாக நடந்தது.  தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் மேலரத வீதியில் ஞானாம்பிகா சமேத ரிஷிபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்தக்கோயில் மிகவும் சிதிலமான நிலையில் பராமரிப்பின்றி இருந்தது. தற்போது கோயில் முழுவதும் புதுப்பிக்கப்பட்டு மிகவும் சிறப்பான முறையில் கும்பாபிஷேகம் நடந்தது.சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் இத்தலத்தில் கும்பாபிஷேகம் நடந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். தற்போது சென்னையை சேர்ந்த திருமதி மகாலட்சுமி சுப்ரமணியன் முயற்சியில் அப்பகுதி மக்களின் துணையோடு தற்போது இந்த கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. மூலவர் ரிஷிபுரீஸ்வரர் கிழக்கு நோக்கியும், அம்மன் ஞானாம்பிகை தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர்.  கோயில் பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், பைரவர், துர்க்கை, சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன.ரிஷபம், சிம்மம், மிதுன ராசிக்காரர்களுக்கும், கவுசிக, பரத்வாஜ, காசிப கோத்திரத்தை சார்ந்தவர்களுக்கும் இத்தலம் பரிகாரத்தலமாக விளங்குகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; செஞ்சி அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் நடைபெற்றது. செஞ்சி சத்திரத்தெரு ... மேலும்
 
temple news
சென்னை; திருமலை, திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல சேவைகள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாசி திருவிழா, மாரியம்மன் கோயிலில் கம்பத்தில் தீச்சட்டி வைக்கப்பட்டதை முன்னிட்டு பக்தர்கள் ... மேலும்
 
temple news
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி அருகே கோட்டைமேடு கிராமத்தில் தனி ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள கோட்டை முனீஸ்வரர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar