காட்டுமன்னார்கோவில் தேர் வெள்ளோட்டத்திற்கு அனுமதி மறுப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2019 01:04
காட்டுமன்னார்கோவில்:- கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வீரநாராயண பெருமாள் கோவில் தேர் வெள்ளோட்டத்தை தேர்தலை காரணம் காட்டி தடுத்ததால் பக்தர்கள் வேதனை யில் உள்ளனர்.
பழமை வாய்ந்த இக்கோவிலில் சித்திரை பிரம்மோற்ஸவம் பிரசித்தி பெற்றது. தேர்த் திரு விழா சித்திரை பவுர்ணமியில் நடக்கும். கோவிலில் உள்ள பழைய கட்டுத்தேரின் சக்கரம், பாகங்கள் தனித்தனியாக இருக்கும். திருவிழாவின் போது தேர் கட்டப்படும். விழா முடிந்த பின் தேர் பாகங்கள் பிரிக்கப்படும்.
தற்போது யமுனை துறைவர் கைங்கர்ய சபையினர் 40 லட்ச ரூபாயில் அச்சுத்தேரை நன்கொடையாக வழங்கி, நேற்று (மார்ச்., 31ல்) வெள்ளோட்டம் விட அறநிலையத் துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது.
ஆனால் தேர்தல் நடத்தை விதிகளை கூறி அனுமதி மறுக்கப்பட்டது. ஏப்., 18ல் தேர்தல் முடிந்த பின் வெள்ளோட்டம் வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏப்.,19 ல் தேரோட்டம் நடக்க உள்ள சூழலில் புதிய தேர் பயன்பாட்டிற்கு வருவது கேள்விக்குறியாகியுள்ளது.
கோவில் விழாக்களை தேர்தலுடன் முடிச்சு போடும் அதிகாரிகள் இதை கருத்தில் கொள்வரா என பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.