நடுவீரப்பட்டு கிருஷ்ணன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2019 01:04
நடுவீரப்பட்டு:சி.என்.பாளையம் அடுத்த இடையர்குப்பம் பாமா ருக்மணி சமேத கிருஷ்ணன் கோவிலில் நேற்று (மார்ச்., 31ல்) மகா கும்பாபிஷேகம் நடந்தது.விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் 30ம் தேதி சனிக்கிழமை மாலை 4:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புன்யாக வாசனம், வாஸ்துசாந்தி, மகா சாந்தி ஹோமம்,சதுர்வேதபாராயணம் நடந்தது.
இரவு 7:00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று (மார்ச்., 31ல்) ஞாயிற்று கிழமை காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம்,கோ பூஜை, அக்னிபிரத்திஷ்டா விசேஷ ஹோமம், ஆச்சார்ய பூஜை மற்றும் 2ம் கால யாகசாலை பூஜை நடந்தது. 9:00 மணிக்கு யாகசாலையில் உள்ள கலசங்கள் புறப்பட்டு ஆலய உலாவாக வந்து 9:40 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து தும்பிக்கை ஆழ்வார், பக்த ஆஞ்சநேயர், மகாவிஷ்ணு, லட்சுமி ஹயக்ரீவர் ஆகிய சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.இரவு 7:00 மணிக்கு பாமா ருக்மணி சமேத கிருஷ்ணன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடந்தது. விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.