பதிவு செய்த நாள்
01
ஏப்
2019
02:04
ப.வேலூர்: ப.வேலூர், மகாமாரியம்மன் தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஆண்கள், 30 அடி அலகு குத்தியும், பெண்கள் அக்னிசட்டி எடுத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர். ப.வேலூர், மகா மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த, 17ல் காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியில் ஒன்றான, அலகு குத்துதல் மற்றும் அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நேற்று (மார்ச்., 31ல்) நடந்தது. இதில், காவிரி ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள், நேர்த்திக்கடனை மாரியம்மனுக்கு செலுத்தும் விதமாக உடல் முழுதும் பல்வேறு வகையான அலகுகளை குத்தியும், 30 அடி அளவிலான வேல் எடுத்து தங்களது கன்னத்தில் குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள் அக்னி சட்டி எடுத்தும், பால்குடம், தீர்த்தக் குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.