விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி குளக்கரை கன்னியம்மன் ஆலய கும்பாபிஷேகம் நடந்தது. விக்கிரவாண்டி நல்ல தண்ணீர் குளக்கரையின் மேற்கில் கிராம தேவதையான கன்னியம்மன் திறந்த வெளி திடலில் இருந்தது. அதை குலதெய்வ வழிபாட்டுக்காரரான பெங்களுரைச்சேர்ந்த சேதுராமஅய்யர் சுசீலா குடும்பத்தினர் புதியதாக ஆலயம் அமைத்தனர். அதன் கும்பாபிஷே கத்தையொட்டி நேற்று முன் தினம் (மார்ச்., 31ல்) பாலாயணம் செய்து கன்னியம்மன் மற்றும் நாக தேவதைளை பிரதிஷ்டை செய்து அஷ்டபந்தனம் சாத்துப்படி நடந்தது.
நேற்று (மார்ச்., 31ல்) காலை 7 மணியளவில் யாகசாலை பூஜை கணபதி ஹோமத்துடன் துவங்கி முதல்கால பூஜை முடிவடைந்து காலை 9.50 மணியளவில் கன்னி யம்மன் மற்றும் பிதுர் தேவதைகளுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்து மகா தீப ஆராதனை முடிந்து அன்னதானம் வினியோகித்தனர்.
கும்பாபிஷேகம் மற்றும் யாக சாலை பூஜைகளை விழுப்புரம் தியாகராஜ அய்யர் மற்றும் குழுவினர் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை பெங்களுரூ சேதுராம அய்யர், விழுப்புரம் நரசிம்மன் ஆகியோர் முன்னின்று செய்திருந்தனர். விக்கிரவாண்டி கிராமத்தை சேர்ந்த முக்கிய பிர முகர்கள் சீனுவாசன், முன்னாள் சேர்மன் குமார சாமி, பாபு ஜீவானந்தம், பூர்ணராவ், நாட்டாண்மை பலராமன், பூசாரி காசிலிங்கம், அசோக்குமார், காந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.