பதிவு செய்த நாள்
05
மார்
2012
11:03
ஸ்ரீவில்லிபுத்தூர் :ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில், மாசி மக தெப்பத் திருவிழா, மார்ச் 8ல் துவங்குகிறது. ஆண்டாள் கோவிலுக்குச் சொந்தமான திருமுக்குளத்தில், ஆண்டுதோறும் மாசி மகம் நட்சத்திரத்தன்று, தெப்பத் திருவிழா நடைபெறும். இந்தாண்டு விழா மார்ச் 8ல் துவங்குகிறது. அன்றிரவு 7 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் தெப்பத்தில் எழுந்தருள, தெப்பம் விழா நடக்கிறது. 9ம் தேதி இரவில் தெப்பத்தில் பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமி தேவி, பெரியாழ்வார், சீனிவாசகப்பெருமாள் எழுந்தருளலும், 10ம் தேதி ராமபிரான், சீதா தேவி, லட்சுமணன், கிருஷ்ணன், ருக்மணி, சத்யபாமா, சுந்தரராஜ பெருமாள், சுந்தரவல்லி, சவுந்தரவல்லி எழுந்தருளலும் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி குருநாதன் செய்து வருகின்றனர்.