பெண்களின் சபரிமலை மண்டைக்காட்டில் மாசிக்கொடை விழா தொடக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மார் 2012 11:03
நாகர்கோவில் : பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில், மாசிக்கொடை விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இக்கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை, ஒடுக்கு பூஜையுடன் கொடை விழா நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கோபாலன் குருக்கள், சட்டநாதன் குருக்கள் கொடியேற்றினர். வரும் வெள்ளிக்கிழமை வலியபடுக்கை நடைபெறுகிறது. தேவி வெள்ளி வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி, எல்லா நாட்களிலும் நடைபெறுகிறது. இங்கு, கேரளாவில் இருந்து பெண்கள் இருமுடி கட்டு ஏந்தி வந்து, பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவதால், பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு திருவிழாவையொட்டி, 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.