பாட்னா: உலகத்திலேயே மிகப்பெரிய இந்துக்கோவிலை பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் கட்டப்போவதாக மகாவீர் மந்திர் டிரஸ்ட் அறிவித்துள்ளது. இந்த கோவில் 100 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது. சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் 5 மாடிகளை கொண்ட இக்கோவிலின் உயரம், சுமார் 222 அடி உயரம் இருக்கும் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கோவில் கட்டத்தேவையான நிலம் 30 கோடி ரூபாய் செலவில் கையகப்படுத்தப் பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கம்போடியா நாட்டில் உள்ள அங்கர்வாட் கோவில் உலகின் மிகப்பெரிய இநதுக்கோவிலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.