சென்னிமலையில் 360 கிலோ எடை லிங்கத்துக்கு பிரதோஷ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஏப் 2019 02:04
சென்னிமலை: சென்னிமலையை சேர்ந்தவர் சரவண சித்தர். மத்திய பிரதேச மாநிலம் சென்ற போது, நர்மதை நதிக்கரையில் இருந்து, 360 கிலோ எடையுள்ள சிவலிங்க கல்லை தேடி எடுத்து வந்தார். கல்லில் எந்த இடத்திலும் உளிபடாமல் நேர்த்தியாக உள்ளது. பளிங்கு கல்போல காணப்படும், இந்த சிவலிங்க கல், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவாகி, ஆற்று நீரில் உருண்டோடி, பானலிங்கமாக கிடைத்துள்ளது.
சென்னிமலை கிழக்கு புது வீதியில் உள்ள, அவரது வீட்டில் பிரதிஷ்டை செய்துள்ளார். இதற்கு முதல் பிரதோஷ விழா, நேற்று (ஏப்., 2ல்) மாலை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.