திருப்புத்தூர்: திருப்புத்தூரில் சமஸ்கான் பள்ளிவாசல் தெருவில் 156 வது சந்தனக்கூடு விழா நடந்தது.சமஸ்கான் பள்ளிவாசல் தெருவில் யாகூப், சமஸ்பீர் அவுலியாக்கள் அடக்கமாகி யுள்ளனர். அதை முன்னிட்டுசந்தன உருஸ் விழா ஆண்டு தோறும் கொண்டாடப்படும். நேற்று (ஏப்., 5ல்) 156ம் ஆண்டு சந்தனக்கூடு விழா நடந்தது.
குடத்தில் சந்தனத்தை கரைத்து இளைஞர் ஒருவரை தேர்ந்தெடுத்து அவரது தலையில் சந்தனக் குடத்தை சுமந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு முன் மேள, தாளத்துடன் ஊர்வலமாக சென்றனர். சந்தனத்தை கொடிமரத்தில் ஊற்றி ஏற்றி நடப்பட்டது. தொடர்ந்து கந்தூரி எனப்படும் அன்னதானம் நடைபெற்றது. விழாவில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்றனர்.