ஆனைமலை:ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு, பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.தமிழகத்தின் முக்கிய ஆன்மிக தலமாக உள்ள, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு, பண்டிகை மற்றும் விசேஷ தினங்களில், மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். நேற்று (ஏப்., 5ல்) அமாவாசையை முன்னிட்டு, நேற்று முன்தினம் (ஏப்., 4ல்) இரவு முதலே, பல ஊர்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்த அம்மனை தரிசித்தனர்.அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தன. ஆற்றுப்பகுதியில் பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.