பதிவு செய்த நாள்
06
ஏப்
2019
02:04
உத்தரகோசமங்கை:-ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் சித்திரைப் பெருவிழா ஏப்.,11 (வியாழன்) காலை 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.
தொடர்ந்து 10 நாட்களும் விஷேச அபிஷேக ஆராதனைகளும், உபயதாரர்களின் மண்டகப்படி பூஜைகளும் நடக்கிறது. பூத, சிம்மம், அன்னம், கிளி, காமதேனு, ரிஷபம், நந்தீஸ்வரர், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதியுலா காலை, மாலை வேளைகளில் நடக்கும்.ஏப். 18 (வியாழன்) மாலை 4:30 முதல் 6:30 மணிக்குள் சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாண உற்ஸவம் நடக்கிறது.
ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா ராணி ஆர்.பிரம்ம கிருஷ்ண ராஜேஸ்வரி நாச்சியார், திவான் கே.பழனிவேல் பாண்டியன், செயல் அலுவலர் எம்.ராமு, பேஷ்கார் கண்ணன் ஆகியோர் செய்து வருகின்றனர்.