திண்டிவனம், மார்ச் 5-திண்டிவனம் தில்லையாடி வள்ளியம்மை நகரில் கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. திண்டிவனம் சென்னை நெடுஞ்சாலையில் உள்ள தில்லையாடி வள்ளியம்மை நகரில் கெங்கையம்மன் கோவில் அமைக் கப்பட்டுள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது. முன்னதாக கடந்த 3ம் தேதி மாலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. நேற்று காலை 2ம் கால யாகசாலை பூஜைகள் முடிந்து காலை 9.50 மணிக்கு கோவில் விமான கலசங்களின் மீது புனித கலச நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு மகா அபிஷேகமும், சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனையும் நடந்தது. பூஜைகளை அர்ச்சகர்கள் நாகராஜ், நகர் சீனுவாசன் செய்திருந்தனர். ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், கீதா ஆகியோர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை தர்மகர்த்தா செல்வம், திருப்பணிக்குழு, மற்றும் தில்லையாடி வள்ளியம்மை நகர் வாழ் பொதுமக்கள் செய்திருந்தனர்.