திண்டுக்கல் அபிராமியம்மன் கோயில் சித்திரைவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2019 12:04
திண்டுக்கல்: திண்டுக்கல் அபிராமியம்மன் கோயில் சித்திரை பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
காலை 10:00 முதல் 10:25 மணிக்குள் கொடியேற்றம் நடந்தது. அம்பாள், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு சுவாமி அம்பாள் கேடயத்தில் வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்று (ஏப்.9) 2 ம் திருவிழாவில் காலை 8:00 மணிக்கு சுவாமி வீதியுலா, இரவு 7:00 மணிக்கு சுவாமி நந்திகேஸ்வரர் வாகனம், அம்பாள் சிம்ம வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. ஏப்.17 ல் மாப்பிள்ளை அழைப்பு, இரவில் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. அதை தொடர்ந்து பூப்பல்லக்கில் சுவாமி வீதியுலா நடக்கிறது. ஏப்.18 ல் தேர் திருவிழா நடக்கிறது.