பதிவு செய்த நாள்
09
ஏப்
2019
12:04
சென்னை: குழந்தைகளுக்கான விவேகானந்தா பாலமந்திர் 24-வது ஆன்மீக -
பண்பாட்டுப் பயிற்சி வகுப்புகளும், பெற்றோர்களுக்கான சிறப்பு
நிகழ்ச்சிகளும் சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தில் நடைபெற இருக்கிறது.
குழந்தைகளுக்கான விவேகானந்தா பாலமந்திர் 24-வது ஆன்மீக - பண்பாட்டுப் பயிற்சி வகுப்பு:
பயிற்சிக் காலம்: மே 1 முதல் மே 31 வரை (சனி விடுமுறை) காலை 9.00 முதல் மதியம் 12:30 வரை
வயது: 8 முதல் 13 வரை (மூன்று முதல் எட்டாம் வகுப்பு வரை)
நன்கொடை: ரூ.1000/-
பாலமந்திர் வகுப்புகளிலிருந்து உங்கள் குழந்தைகள் கற்பது:
* வேத பாராயணம், கீதை, பஜனை, ஸ்தோத்திரங்கள், வழிகாட்டுதல் தியானம், மதிப்பீட்டுக் கல்வி, அடிப்படை தமிழ் மறைகள்
* ஆரோக்கியமான உணவு முறைகள், ஓவியம், யோகாசனப் பயிற்சிகள்
* பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை மதித்தல்
* ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் கூறும் கதைகள், இந்தியக்கலாச்சாரம் மற்றும் சமயம் பற்றிய அறிமுகம்
* ராமகிருஷ்ணர், சாரதாதேவி மற்றும் சுவாமி விவேகானந்தர் வாழ்வும் செய்தியும்
* கர்ம யோகம் - சேவை செய்ய பயிற்சி
சிறப்பு நிகழ்ச்சிகள்:
* தாயைப் போற்றும் மாத்ரு பூஜை - 12.5.19
* தந்தையைப் போற்றும் பிதா பூஜை - 19.5.19
* குருவை வணங்கும் ஆச்சார்ய பூஜை - 26.5.19
* வித்யார்த்தி ஹோமம் -மாணவர்களுக்கான உறுதிமொழிகள் - 30.5.19
விதிமுறைகள்:
* மாணவர்கள் வெள்ளை பைஜாமா மற்றும் குர்தா அணிந்து வரவேண்டும்.
* மாணவிகள் வெள்ளை சுடிதார் மற்றும் துப்பட்டா அணிந்து வரவேண்டும்.
* மாணவ/ மாணவிகள் அடையாள அட்டையுடன் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புத்தகங்களைத் தினமும் எடுத்து வரவேண்டும்.
* நேரம் தவறாமை மிகவும் முக்கியம்.
பெற்றோர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி
சிறந்த
குணத்தை உருவாக்குகின்ற, மன வலிமையை வளர்க்கின்ற, அறிவை விரியச் செய்கின்ற
ஒருவனைச் சொந்தக் கால்களில் நிற்கச் செய்கின்ற கல்வியே தேவை. - சுவாமி
விவேகானந்தர். அன்புக்குரிய பெற்றோர்களே, நீங்கள் மேலும் சிறந்த
பொறுப்புள்ள
பெற்றோர்களாக விளங்குவதற்கு உதவும் இந்த நிகழ்ச்சிக்கு
உங்களை அன்புடன் அழைக்கிறோம். இந்த நிகழ்ச்சி உங்களது குழந்தைப் பருவத்தின்
ஒரு குதூகலமான நினைவுகூர்தலாக அமையும். அதன் மூலம் உங்கள் குழந்தைகளுக்கு
அவர்கள் ஓர் அழகான குடும்பத்தை உருவாக்க வேண்டிய அன்பு, அறிவு ஆகியவற்றை
நீங்கள் வழங்க முடியும்.
பெற்றோர்கள் கற்க இருப்பது
* நல்ல குடும்ப மதிப்பீடுகள்
* மகிழ்ச்சியான வாழ்க்கை
* கலாச்சார மற்றும் நீதிநெறிக் கதைகள் -கற்கவும் கற்பிக்கவும்
* பக்திப் பாடல்கள்
* குழந்தை வளர்ப்புக் கலை
* இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம்
* குழந்தை மனோ தத்துவத்தை அறிதல்
* வீடியோ காட்சிகள் மூலம் படிப்பினை
* ராமகிருஷ்ணர், சாரதாதேவி மற்றும் சுவாமி விவேகானந்தர்
ஆகியோரின் வாழ்க்கையைப் பற்றி அறிதல்
பயிற்சி காலம்: மே 1 முதல் 31 வரை 2019
நேரம்: காலை 9:45 மணி முதல் 12:00 வரை. சனிக்கிழமை மற்றும் பூஜை நாட்களில் விடுமுறை - 23 நாட்கள் மட்டும்.
நன்கொடை ரூ. 500/-
துறவிகளாலும் அறிஞர்களாலும் வகுப்புகள் நடத்தப்படும் உங்களது தனித்திறமைகள் வளர்வதற்கான வாய்ப்பு.
நிகழ்ச்சி நடைபெறும் இடம்: ராமகிருஷ்ண மடம்
31, ராமகிருஷ்ண மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை - 600004.
போன்: 044 - 2462 1110
email: mail@chennaimath.org
website: www.chennaimath.org
தொடர்புக்கு: 98402 35395