பதிவு செய்த நாள்
09
ஏப்
2019
12:04
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், பங்குனி கிருத்திகை நாளில், பக்தர்கள், தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றினர்.
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், மாதந்தோறும், கிருத்திகை விழா நடக்கும். அந்த வகையில், பங்குனி மாத கிருத்திகை விழா, நேற்று நடந்தது.பக்தர்கள், மொட்டை அடித்தும், காவடிகள் எடுத்தும், துலாபாரம் செய்தும், தங்கள் பிரார்த்தனை நிறைவேற்றினர்.நேற்று முன்தினம், மூலவருக்கு மஹா அபிஷேகமும், வெள்ளி மயில் கந்தன் வீதி உலாவும் நடந்தது. நேற்று அதிகாலை முதல், கந்தசுவாமியை வழிபட, பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.